தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X
செங்கம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்கு வழங்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகுருக்கை கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் வாக்கு வழங்கப்பட்டது.

அந்த தபால் வாக்கினை வாக்குப் பெட்டியில் சேகரிக்கும் பணி நடைபெற்றது-. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப்நந்தூரி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!