திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்ட அளவிலான செஸ் போட்டி

Chess News | Tiruvannamalai News
X

தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் கலந்துகொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

Chess News- திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

Chess News- மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டிதிருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் வட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

தண்டராம்பட்டு வட்ட அளவிலான செஸ் போட்டி வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் கலந்துகொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்களின் கல்வியில் மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பலராமன், வாணாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கஸ்தூரி, எடக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைரத்தினம், தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி கிளாரா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி, ராதிகா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். செஸ் போட்டியில் தண்டராம்பட்டை வட்ட அளவிலான 25 பள்ளிகளைச் சேர்ந்த 140 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்த கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாவட்ட மாநில தேசிய உலக அளவில் முதலிடம் பெற்று கலசப்பாக்கம் தொகுதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களிடத்தில் உரையாற்றினார்.

இப்போட்டியில் 35 பள்ளிகளை சேர்ந்த 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில் டிஇஓ தயாளன், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் திலகவதி, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ,ஒன்றிய செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம் அடுத்த மேல் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் நடுநிலை உயர்நிலை மேல்நிலை ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்அரசு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் அருள்அரசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, வேலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் குமார் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!