அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோப்பு படம்
செங்கத்தை அடுத்த பரமனந்தல் அருகே உள்ள திருவள்ளுவர்நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில், நேற்று மதியம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. உணவு உண்ட குழந்தைகளில் 6 பேர் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து 6 பேரையும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் கூறுகையில், தற்போது 6 குழந்தைகளும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளார்கள் என தெரிவித்தார். அங்கன்வாடி மையத்தில் வழங்கிய உணவில் பல்லி இருந்ததாக குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu