திருவண்ணாமலையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தண்டராம்பட்டு அடுத்த கீழ் சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் நேற்று பிள்ளை தந்தாள் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக திருவண்ணாமலை கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
தண்டராம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசி , வட்டார சமூக நல அலுவலர் அம்சவல்லி , கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மைனர் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் நடைபெறுவது சட்டப்படி குற்றம் என்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மைனர் பெண் மற்றும் அவருக்கு தாலி கட்ட இருந்த ஆசிரியர் சந்தோஷ் ஆகியோரை திருவண்ணாமலை தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu