செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்: எம்எல்ஏ துவக்கம்

செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்: எம்எல்ஏ துவக்கம்
X

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட கிரி எம் எல் ஏ

செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

இறையூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்எல்ஏ கி ரி , துவங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி சான்றிதழ்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இறையூர் கிராமத்தில் பாலாஜி தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அனைத்து துறை அலுவலக சார்பில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் எம்எல்ஏ கிரி மக்களுடன் முதல்வர் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிலிருந்து வருவாய்த்துறை, ஊரக உள்ளாட் சி த்துறை , பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் பரிசீலனை செ ய் து தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்தி சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இதில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மதிய ஒன்றிய செயலாளர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் குப்பநத்தம் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மட்டதாரி ஊராட்சிக்குபட்ட சென்னாத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி.எம் தொடக்க பள்ளியில் முதல்வர் காலை உணவு விரிவாக்கம் திட்டத்தை வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !