செங்கம் பேரூராட்சி: பெரும்பான்மையை நிரூபிக்க பாமக வேட்பாளர் கடத்தல்

செங்கம் பேரூராட்சி: பெரும்பான்மையை நிரூபிக்க பாமக வேட்பாளர் கடத்தல்
X

செங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பா.ம.க.வினர் சாலை மறியல் செய்த காட்சி

செங்கம் பேரூராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க பாமக வேட்பாளர் கடத்தப்பட்டதாக கூறி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

செங்கம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும் பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி, பாமக தலா 1 வார்டில் வெற்றி பெற்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க தி.மு.க ,அ.தி.மு.க. மோதும் நிலையில் உள்ளது. 18 வது வார்டு பா.ம.க. வேட்பாளர் அருள்ஜோதி வெற்றி பெற்றார். அவரை சிலர் கடத்தி சென்றனர்.

இதை தொடர்ந்து பாமகவினர் உரிய பாதுகாப்பு வழங்க தவறிய போலீசாரை கண்டித்தும், கடத்திச் செல்லப்பட்ட உறுப்பினரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கூறி செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் செங்கம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் வாக்கு மையத்திற்கு சற்று தொலைவில் பாமக உறுப்பினர் கடத்தப்பட்ட விவகாரத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவல் அறிந்த எஸ்பி பவன்குமார்ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பகுதியில் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் அருள்ஜோதி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு காரில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டார்.

இதைதொடர்ந்து பா.ம.க.வினர் சாலை மறியலை கைவிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் உடன் சென்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!