மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் செங்கம் எம்எல்ஏ கிரி ஆய்வு

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் செங்கம் எம்எல்ஏ  கிரி  ஆய்வு
X

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட எம்எல்ஏ கிரி

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.

அங்கிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு தேவையான வேட்டி,சேலை, பாத்திரங்கள், உணவுகளை வழங்கினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு அங்கு தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது வருவாய் துறையினர், செங்கம் கிராம நிர்வாக அலுவலர் , பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டு தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!