செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்கம்

செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்கம்
X

லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தை திறந்து வைத்த செங்கம் எம்எல்ஏ கிரி

செங்கத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் திறப்பு விழா அகில இந்திய போக்குவரத்து தலைவர் குருஜி சண்முகப்பா தலைமையில் நடைபெற்றது.

இந்த செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்க சிறப்பு விழாவில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பங்கேற்று ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து சங்கத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு போக்குவரத்து சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சாலையில் ஏற்படும் பல்வேறு இன்னல்கள் பற்றி பேசி சிறப்பித்தார்.

மேலும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் எம்எல்ஏ கிரிக்கு, செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் ,அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் மற்றும் லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் தனராஜ், சென்னை மாநகர தலைவர் யுவராஜ், திருவண்ணாமலை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலதண்டாயுதம், சங்க நிர்வாகிகள், தணிக்கையாளர் பிரபாகரன், மற்றும் சுற்றுப்பகுதி சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திமுக இளைஞரணி மாநாடு, டி-ஷர்ட் வழங்கிய எம்எல்ஏ;

திமுக இளைஞரணி மாநாட்டிற்கு செல்லும் இளைஞர்களுக்கு எம்எல்ஏ டி ஷர்ட் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் சேலத்தில் நடைபெறும் இரண்டாவது திமுக இளைஞரணி மாநாட்டிற்கு செங்கம் தொகுதியில் இருந்து செல்லும் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி டி ஷர்ட் வழங்கினார் . இதை ஏராளமான இளைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் அன்பழகன் , தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா , கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் , மத்திய ஒன்றிய செயலாளர் ஏழுமலை மற்றும் அணி செயலாளர், கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future