குறுகிய இடத்தில் செங்கம் இந்தியன் வங்கி; மாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை
செங்கம் இந்தியன் வங்கி கிளை.
செங்கம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 15 கிராம பொதுமக்கள் அரசு வங்கி சேவைக்காக செங்கம் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு வந்து செல்கின்றனர். இந்த இந்தியன் வங்கிக் கிளையில் போதுமான இடவசதி இல்லை என வாடிக்கையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த கிளையில் ஏடிஎம் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம், பாஸ்புக் அச்சடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் பழுதடைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இந்தியன் வங்கி சார்பில் கிராம பகுதிகளுக்கு பிஓஎஸ் (POS) கருவி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒதுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு பிஓஎஸ் (POS) கருவிைய கொண்டு செல்லாமல் வங்கியின் வளாகத்திலேயே தற்காலிக ஆட்களை நியமித்து பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமப்புற மக்கள் பண பரிமாற்றம் செய்வதற்கும் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை அறிவதற்காகவும் இந்தியன் வங்கிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வங்கி மிகவும் குறுகலான இடத்தில் உள்ளதாலும், அதே பகுதியில் மார்க்கெட் அமைந்துள்ளதாலும், நெரிசலில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், வங்கி சேவை குறித்து வங்கியின் மேலாளரிடம் பொதுமக்கள் தெரிவிக்க முயன்றால் தமிழ் தெரியாத ஹிந்தி மொழி பேசும் மேலாளர் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை சொல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. கிராமப்புறங்களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இந்த இந்தியன் வங்கி தான் தங்களது வைப்பு நிதி சேமிப்பு நிதி ஆகியவைகளை தொடங்குவதற்கு இந்தியன் வங்கியைத்தான் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு இந்த கிராமப்புற மக்கள் பயன்படும் வகையில் பிஓஎஸ் (POS) கருவிகளை ஒதுக்கப்பட்டுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று சேவை வழங்கவும், இந்தியன் வங்கி கிளையை விசாலமான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu