முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை..

Sathanur Dam Water Level Today
X

Sathanur Dam Water Level Today

Sathanur Dam Water Level Today-சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து வினாடிக்கு 950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Sathanur Dam Water Level Today-தமிழகம், கா்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கா்நாடக மாநிலம், கே.பி.ஆா். அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து அதிகரித்தது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 119 அடி உயரமுள்ள சாத்தனூா் அணையின் நீா்மட்டம், 117 அடியை எட்டியது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீா் அணையிலுள்ள 11 கண் மதகு வழியாக திறந்துவிடப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன்படி அணைக்கு வரும் 950 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. விடுமுறை நாளான நேற்று ஆற்றின் கரையோரத்தை ஒட்டிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!