திருவண்ணாமலையில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; 3 பேர் உயிரிழப்பு

விபத்து நடந்த இடத்தில், போலீசார் விசாரணை நடத்தினர்.
செங்கத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் , ஆகாஷ், கவுதம மணிகண்டன் . இவர்கள் 3 பேரும் காக்கனாம் பாளையத்தில் இருந்து, திருச்சி செல்வதற்காக நேற்று இரவு காரில் வந்து கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திண்டிவனத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சென்ற லாரியும், இவர்களது காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகிய 3 பேரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் உயிரிழந்த மூன்று பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேத்துப்பட்டு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த லாரி; 6 பேர் படுகாயம்
சேத்துப்பட்டு அருகே நள்ளிரவில் லாரி வீட்டுக்குள் புகுந்ததால் லாரி டிரைவர், கிளினர் உள்பட 6 பேர் படு காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், பூ வியபாரி. இவரது மனைவி ஜெயலட்சுமி, அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, இவர் மனைவி சோனியா ஆகிய 4 பேரும் நேற்று வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வந்தவாசியில் இருந்து போளுர் அடுத்த காப்பலூர் அட்டை பெட்டி தொழிற்சாலைக்கு மர கட்டைகளை ஏற்றிவந்த லாரி சாலையில் ஓரம் இருந்த புளியமர கிளையில் மோதி பக்கத்தில் இருந்த வீட்டின் உள்ளே புகுந்தது. இதில் வீட்டின் சிமெண்ட் கூரை சுவர் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் லாரி மோதிய சத்தமும் வீட்டின் உள்ளே இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து இடிபாடுகளில் சிக்கிய கிருஷ்ணன், ஜெயலட்சுமி, ஏழுமலை, சோனியா மற்றும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மோகன், கிளீனர் ஏழுமலை ஆகிய 6 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலிசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu