செங்கம் புதிய வழித் தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

செங்கம் புதிய வழித் தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்
X

பேருந்து சேவையை தொடங்கி வைத்த கிரி எம்எல்ஏ.

செங்கத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பேருந்து நிலையத்திலிருந்து செங்கம் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்சுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் கிராமப் பகுதிகளில் இருந்து சென்னை செல்ல பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், இளங்குண்ணியிலிருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பேருந்து சேவை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தமிழக அரசுக்கு சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

மேலும் அமைச்சா் எ.வ.வேலு மூலமாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று இளங்குண்ணியில் இருந்து சென்னைக்கு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்க விழா இளங்குண்ணி கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொமுச மண்டல பொதுச் செயலா் செளந்ததரராஜன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கலைச்செல்வன், நிா்வாகி துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனை மேலாளா் சேட்டு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்தை இயக்கி புதிய வழித் தடத்தில் பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், நீப்பத்துறையில் இருந்து திருப்பதிக்கு, புதுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், செங்கம் பேரூராட்சி தலைவா் சாதிக்பாஷா, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்கள், தொமுச நிர்வாகிகள் ,செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு, துணை பொறியாளர் லெனின், ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!