மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் கைது
X

பைல் படம்

செங்கம் அருகே 10 ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி அதே பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றார். அப்போது, அங்கு நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பவன்குமார், அவரது அண்ணன் ராமஜெயம், மற்றும் செல்வராஜ் ஆகியோர் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இவர்களுடைய சொந்தரவு தாங்கமுடியாத மாணவி தனது பாட்டி மற்றும் அத்தையிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்ற செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் புகாரில் குறிப்பிட்டிருந்த ராமஜெயம், பவுன் குமார் மற்றும் செல்வராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் நடந்த சம்பவம் உறுதியானது. இதையடுத்து காவல் ஆய்வாளர் லட்சுமி போக்சோ சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

ஆடு மேய்க்க சென்ற சிறுமியிடம் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்