செங்கத்தில் பூட்டை உடைத்து செல்போன்கள், திருட்டு

செங்கத்தில் பூட்டை உடைத்து செல்போன்கள், திருட்டு
X

காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த செங்கம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்

செங்கத்தில் செல்போன் கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன்களை திருடிச் சென்றனர்

செங்கத்தில் செல்போன் கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன்களை திருடியுள்ளனர்

செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் செல்போன் கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து பூட்டி இருந்த கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கடைக்குள் சென்ற அவர்கள் ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன்களை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து அந்த கடையின் உரிமையாளர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்ததால் அங்கிருந்து தப்பிச் விட்டனர்.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் புறவழிச் சாலை பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையிலும் மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் கடையின் உள்ளே இருந்த பல லட்ச ரூபாய் மதுபாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் தப்பியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ளகண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் கடையில் மர்மநபர் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதனை வைத்து தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கைபேசிகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை கண்டுபிடித்து தர கோரி செங்கம் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Next Story
ai tools for education