திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடக்கம்

காலை உணவு விரிவாக்க திட்ட துவக்க விழாவில் சிறுமிக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த அமைச்சர் எ.வ.வேலு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 1552 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மாநிலம் முழுவதும் 1,554 பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செய்யாறு நகராட்சி மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 67 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் 17 பள்ளிகள், 10 பேரூராட்சிகளில் 47 பள்ளிகள் மற்றும் 17 ஒன்றியங்களில் 1488 பள்ளிகள் உள்பட மொததம் 1522 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான விழா திருவண்ணாமலை ஒன்றியம் கொளக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தைக்கு அமைச்சர் உணவுகளை ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், அண்ணாதுரை எம்பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒப்பந்ததாரர்கள் , மாவட்ட துணைச் செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu