கிராம சபை கூட்டத்தில் கறுப்பு கொடி காட்டிய பாஜகவினர்

கிராம சபை கூட்டத்தில் கறுப்பு கொடி  காட்டிய பாஜகவினர்
X

கீழ் செட்டிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன்

Gram Sabha -செங்கம் அருகே கிராம சபைக்கூட்டத்தில் தலைவருக்கு கறுப்பு கொடி காட்டி, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Gram Sabha -திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் கிராம சபை கூட்டம், நேற்று நடைபெற்றது. உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஒன்றியம், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;

பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மக்களை தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டமானது சிறப்பான முறையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலமாக, மாவட்டத்தில் 10 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு கற்றல் கற்பித்தல் திறன் சிறப்பான முறையில் இத்திட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், பெண்கள் அதிகம் படித்து முன்னேற வேண்டும் என்பதன் அடிப்படையில், 'புதுமைப் பெண்' திட்டம் தொடங்கப்பட்டு, அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், சிமெண்டு சாலைகள், பக்க கால்வாய்கள் அமைப்பது போன்ற பல்வேறு பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடா்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டு, மகளிர் திட்டம் மூலம் அமுதசுரபி நிதியில் இருந்து 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் நிதியும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கேந்தி நாற்று மற்றும் வெண்டை விதைகளையும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ஈடுபொருட்களையும் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், வேளாண்மை துறை இணை இயக்குநர் பாலா, செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.

கிராம சபை கூட்டத்தில், தலைவருக்கு கறுப்பு கொடி காட்டிய எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

செங்கம் அருகே புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாய்விடாந்தாங்கள் கிராம தலைவராக இருப்பவர் இளவரசி , இவர் திருவண்ணாமலையில் வசித்து வருவதாக, கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய் ,மின்விளக்குகள் உள்ளிட்டவைகளை செய்து தரவில்லை என கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குடிநீர் பைப் லைன் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், ஊராட்சி மன்ற தலைவர் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

குறைகள் குறித்து, ஊராட்சி மன்ற பெண் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருவண்ணாமலையில் வசித்து வருவதாக கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னிலையில், பாஜக நிர்வாகிகள் நேற்று கிராமசபை கூட்டத்திற்கு கறுப்புக்கொடி ஏந்தி ஊராட்சி மன்ற பெண் தலைவர் இளவரசிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கொட்டும் மழையிலும், கிராமசபை கூட்டத்தில் நனைந்தபடி ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் மக்கள் கேட்ட சரமாரி கேள்விகளுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் எந்த பதிலும் சொல்லாமல், அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் தொடங்கியது. பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகள் முன்னிலையில் கூறினர். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!