தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை!

தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை!
X

மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்த கிரி எம் எல் ஏ

தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை, செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது

தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை, செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

செங்கம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அவசர கால தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணிகள் துவக்க விழா நடைபெற்றது

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் தற்போது உள்ள நவீன வசதி கொண்ட அனைத்து அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து செங்கம் தொகுதிக்குட்பட்ட செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் பகுதியில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோவிலின் பின்புறம் தடுப்பணை அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இதில் நகர செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஏழுமலை, பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, கூட்டுறவு சங்க தலைவர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதம், உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி, தொழில்நுட்ப உதவியாளர் சக்கரவர்த்தி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!