கருணாநிதி நூற்றாண்டு விழா; திமுக சார்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கல்

நலத் திட்ட உதவிகளை வழங்கிய மருத்துவரணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன்
திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட கணதம்பூண்டி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. ஐந்தாயிரம் பேருக்கு குக்கர் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் வழங்கினார்.
திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கணதம்பூண்டி, அத்தியந்தல், ஆணாய் பிறந்தான், உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன், 5000 மகளிருக்கு சமையல் குக்கர் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் ,
திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது . திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெண்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக, குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையை வீடு வீடாக முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். பெண்களுக்கான இந்த ஆட்சி நடக்கிறது ,எனவே இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர் ,மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu