விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு
தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும், அதிவேகப் பயணம் விபத்தில் முடியும், படியில் பயணம் நொடியில் மரணம், என்ற பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் ஏற்பாட்டில் வாகன விபத்து குறித்து விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி வியாபாரிகளிடமும் ஆட்டோ வேன் கார் ஓட்டுனர்களிடமும் ஆசிரியர்களிடமும் விபத்து குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் செங்கம் பகுதியில் விபத்து நடைபெறுவதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் மாணவர்கள் வியாபாரிகளிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு கூட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளவர்கள் எத்தனை நபர்கள் தலைக்கவசம் அணிந்து வந்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். முதலில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனத்தை எடுத்துச் செல்லவும் சீட் பெல்ட் அணிந்துகொண்டு கார்களை இயக்கினாலே எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என கூறினார்.
மேலும் பள்ளி மாணவர்கள் எக்காரணம் கொண்டும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லக் கூடாது எனவும் பெற்றோர்கள் மூலமாகவே பள்ளிக்கு பைக்கில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் கூட்டம் முடிந்தபின் விபத்து குறித்து தனியார் திருமண மண்டபத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரை தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும், அதிவேகப் பயணம் விபத்தில் முடியும், படியில் பயணம் நொடியில் மரணம், என்ற பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu