/* */

திருவண்ணாமலை வேளாண்மை துறையின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

அதிக மகசூல் செய்தவருக்கு சிறந்த விவசாயி மற்றும் சிறப்பாக பணிபுரிந்த வேளாண்மை அலுவலருக்கு சிறந்த அலுவலருக்கான விருது ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை வேளாண்மை துறையின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
X

விருதுகளை வழங்கிய ஆட்சியர்.

அதிக மகசூல் செய்தவருக்கு சிறந்த விவசாயி , சிறப்பாக பணிபுரிந்த வேளாண்மை அலுவலருக்கு சிறந்த அலுவலருக்கான விருது கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் நீர் மற்றும் நிலவள திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு வட்டாரத்தில் ஆழ்யாறு உபவடிநீர்ப்பகுதி தேர்வு செய்யப்பட்டு வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவில் விளைச்சல் எடுத்த விவசாயிக்கு தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் அவர்கள் சிறந்த விவசாயிக்கான விருதை வழங்கினார்.

விருதுகளை தென்குடியினர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்புசாமி ஆகிய இரண்டு விவசாயிகள் இந்த விருதை பெற்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த உதவி வேளாண்மை துறை அலுவலர் கண்ணனுக்கு சிறந்த அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல்ரகூப், வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு, வேளாண்மை அலுவலர் நிவேதா, துணை தாசில்தார்கள் செந்தில்குமார், மோகன்ராம், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

திருவண்ணாமலையில் பனை பொருட்களின் விற்பனை கூடத்தை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பனை பொருட்களின் விற்பனை கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

இந்த விற்பனை கூடத்தில் பனை பொருட்கள், பனை வெல்லம் கலந்த சுக்குகாபி, கதர் கிராம தொழில் வாரிய உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் பனை வெல்லத்தில் தயார் செய்யப்பட்ட சுக்குகாபியை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் குடித்து ருசி பார்த்தனர்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் ரங்கசாமி (விழுப்புரம்), உதவி திட்ட அலுவலர் ஜான்சன், காதி கிராப்ட் மேலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 May 2023 12:13 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு