தண்டராம்பட்டு பகுதி வளர்ச்சிப் பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

தண்டராம்பட்டு பகுதி வளர்ச்சிப் பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
X

தண்டராம்பட்டு பகுதிகளில் நடைபெறும்  வளர்ச்சிப் பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி தண்டராம்பட்டு யூனியன், கீழ் சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேரில் ஆய்வு செய்தார்.

பிரதமர் வீடு கட்டும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆய்வு செய்து பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அதே பகுதியில் இருளர் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகளை அவர் பார்வையிட்டார். தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகளை சரியாக செயல்படுத்திட பஞ்சாயத்துத் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது பஞ்சாயத்து தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!