செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: உதவி இயக்குனர் ஆய்வு

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: உதவி இயக்குனர் ஆய்வு
X

 கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி மற்றும் உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து உதவி இயக்குனர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேல் பள்ளிப்பட்டு மற்றும் மேல் வணக்கம் பாடி ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள PMAY வீடு பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேல் வணக்கம் பாடி ஊராட்சியில் பண்ணை குட்டை அமைக்கும் பணி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் பதிவேடுகள் ஆய்வு செய்தார்.

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் நிலுவையில் உள்ள PMAY வீடு பணிகளை பயனாளிகளிடம் நேரடி விசாரணை மேற்கொண்டு வரும் திங்கட்கிழமை அனைத்து பணிகளையும் தூங்குவதற்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் 2020. 21. திட்டத்தில் சமுதாய கழிப்பறை கட்டும் (மதிப்பீடு ரூபாய் 5,20,000 ) பணிகளை ஆய்வு செய்தார்.

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வருகின்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு , அனைத்து திட்டப்பணிகள் குறித்து முன்னேற்றத்தினை 31.3.20022க்குள் விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story