தொலைந்து போன வேகத்திலேயே திரும்பி கிடைத்த 2 லட்ச ரூபாய்; போலீசாருக்கு பாராட்டு

தொலைந்து போன வேகத்திலேயே திரும்பி கிடைத்த 2 லட்ச ரூபாய்; போலீசாருக்கு பாராட்டு

காவலருக்கு  சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்த செங்கம் டி.எஸ்.பி. தேன்மொழிவேல்

செங்கத்தில் தவறவிட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அதிரடியாக மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கத்தில் தவறவிட்ட 2 லட்சம் ரூபாயை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த இரண்டு காவலருக்கு செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் பாராட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம்பாஷா. இவர் செங்கத்தில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டில் இருந்து எலக்ட்ரிக் பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக துணி பையில் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறார். அப்பொழுது வரும் வழியில் பணத்தை தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் அவர் வந்த பாதையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக மிதிவண்டியில் வந்த மேல்செங்கம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சலீம் பாஷா தவற விட்ட பணப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்த பணப்பையை புகார்கொடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர்கண்டுபிடித்தனர்.

அதைத்தொடர்ந்து பணத்தை தவறவிட்ட சாதிக் பாஷாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துரிதமாக செயல்பட்ட சந்துரு மற்றும் மாதேஷ், ஆகிய இரண்டு காவலருக்கு செங்கம் டி.எஸ்.பி. தேன்மொழிவேல் சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

செங்கத்தில் கஞ்சா பறிமுதல்

செங்கத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகதேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியில் மருதமலை என்பவரது மகன் மாரிகண்ணு என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பின்புரத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக செங்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ கஞ்சா மண்ணில் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்த இரண்டு கிலோ அளவுள்ள கஞ்சாவை செங்கம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த மாரி கண்ணு காவல்துறையினர் வருவதை அறிந்து தப்பி ஓடியதை அடுத்து அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை செங்கம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Next Story