செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
X

செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.

செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சார்ந்தோர், புதிய நிலம் வாங்குதல், விவசாய நிலம் வீட்டுமனை பிரிவு, நில அடமானம் உள்ளிட்ட பத்திர பதிவு செய்வதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான பத்து பேர் குழுவாக கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 73,190 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலக ஊழியா்கள், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த பத்திர எழுத்தா்கள், வாடிக்கையாளா்கள் என அனைவரிடமும் சோதனை நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வேட்டை நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் திருவண்ணாமலை நகராட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆய்வாளர், அதுபோலவே சமீபத்தில் ஆரணி வட்டாட்சியர், கலசப்பாக்கம் பகுதியில் லஞ்சம் கேட்ட விஏஓ, செங்கம் பகுதியில் வருவாய் ஆய்வாளர், திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 , 1 என தொடர்ச்சியாக அதிகாரிகள் சிக்கிக் கொண்டு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!