/* */

மலை கிராமங்களில், திருவண்ணாமலை போலீசார் சாராய தடுப்பு வேட்டை

தானிப்பாடி அருகே மலை கிராமங்களில், திருவண்ணாமலை எஸ்பி தலைமையில் சாராய தடுப்பு வேட்டை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மலை கிராமங்களில், திருவண்ணாமலை போலீசார் சாராய தடுப்பு வேட்டை
X

மதுவிலக்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு  துண்டுபிரசுரங்கள் வழங்கிய மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் ஒழிப்பது தொடர்பாக, மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 50 காவலர்கள் கொண்ட 5 தனிப்படைகள் கள்நாத்தூர், புதூர் மலை, அரிசிக்கல்பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

புதூர்செக்கடி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொதுமக்களிடையே மதுவிலக்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், பெண்கள் தங்களின் கணவர் மற்றும் பிள்ளைகளை சாராயம் தொழிலில் ஈடுபடாமல் இருக்க செய்ய வேண்டும். குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடைய பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். விவசாய தொழில் செய்ய ஊக்குவிக்கலாம். படித்த இளைஞர்களுக்கு மேல்படிப்பு தொடர தேவையான உதவிகளை வழங்க காவல் துறை சார்பாக தயாராக உள்ளோம் என்றார். மேலும் கள்ளச்சாராயம் ஒழிப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை தாலுகா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மனைவி நிர்மலா . இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போளூர் டவுன் வி.எஸ். பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்மலா, விஜயகுமார், ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 July 2023 3:24 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    தந்தை இறப்பில் சந்தேகம்: மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகன் மனு
  2. கோவை மாநகர்
    அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி
  3. வீடியோ
    🔴LIVE : மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு |...
  4. வந்தவாசி
    சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது..!
  5. திருவண்ணாமலை
    ஆதார் சேவை மையத்தில் ஆட்சியா் திடீர் ஆய்வு
  6. கோவை மாநகர்
    கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் மருதமலை முருகன் கோவிலில் வழிபாடு..!
  7. திருவண்ணாமலை
    நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அசத்திய திருவண்ணாமலை மாணவி
  8. அரசியல்
    மக்களவை தேர்தல் 2024: பாஜகவின் சறுக்கலும் வாக்காளர்களின் மனநிலையும்
  9. இந்தியா
    அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டதில்லை: இந்திய தலைமை நீதிபதி டிஒய்...
  10. தொழில்நுட்பம்
    நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து திரும்பும் சீனாவின் விண்கலம்