/* */

செங்கம் பகுதியில் அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு

செங்கம் பகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

செங்கம் பகுதியில் அண்ணாதுரை வாக்கு சேகரிப்பு
X

செங்கம் தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் கிரி எம் எல் ஏ

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாக்கம், அகரம் ,பாளையப்பட்டு, சின்ன கோலா பாடி, கண்ண குறிக்கை, காரியமங்கலம், மேல் பெண்ணாத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சென்று கொளுத்தும் வெயிலிலும் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாத்தனூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோருக்கு திமுக நிர்வாகிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக பிரம்மாண்ட ரோஜா மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர்.

அப்போது கிரி எம் எல் ஏ பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், விவசாய நகை கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு தேவையான மேலும் பல நல்ல திட்டங்களை அதிகமாக செயல்படுத்த முடியும் . எனவே அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கிரி எம் எல் ஏ பேசினார்.

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், கூட்டணி கட்சி தோழர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2024 2:35 AM GMT

Related News