கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு

கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு
X

உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதை யாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

தண்டராம்பட்டு அருகே கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை என ஊர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக 15-க்கும் மேற்பட்ட ஆடு, கன்று குட்டிகளை மர்ம விலங்கு கடித்து வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை ஏழுமலை என்பவருடைய நிலத்தில் கன்று குட்டிகளை 5 வெறிநாய்கள் கடித்து கொண்டிருப்பதை தாயுமானவர் என்பவர் பார்த்து வெறி நாய்களை கல்லால் விரட்டி உள்ளார்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், வனவர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து வெறி நாய்கள், ஆடு மாடுகளை கடிப்பதாகவும், மர்ம விலங்கு ஏதும் இல்லை என்றும் உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மர்ம விலங்கு குறித்த பயம் நீங்கியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்