முருகன் கோவில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு

ராஜ அலங்காரத்தில் மண்மலை முருகன்
ஆனி கிருத்திகை நாளில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு சொந்த வீடு அமையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு மனம் குளிரும் வகையில் நல்ல செய்தி தேடி வரும். வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும். செவ்வாய்கிழமையுடன் கூடிய கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
நேற்றைய தினம் செவ்வாய்கிழமை ஆனி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் நேற்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபார்தனையும் நடைபெற்றது.
நேற்று இரவு முருகப்பெருமான் கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.
மண்மலை முருகன்
செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி, சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்று வந்தன.
இதைத் தொடா்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து, அங்குள்ள மண்மலையை சுற்றி வந்தனா். மேலும், பக்தா்களுக்கு விழாக்குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கலசாபிஷேக விழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு மற்றும் கலசாபிஷேக விழா நடைபெற்றது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு மற்றும் கலசாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவிதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu