ஆம்புலன்ஸில் உள்ளவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸில் உள்ளவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்
X

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் 

பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதால் நோயாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது

செங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றுக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

கோணாங்குட்டை கேட் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த காவல்துறை அறிவிப்பு பதாகை மீது வாகனம் மோதியதில், சாலையை விட்டு இறங்கி முட்புதருக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தை, மற்றும் உறவினர்கள், ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் ஆகிய 6 பேரும் காயங்களின்றி உயிர் தப்பினர் .

பின்னர் தகவலறிந்து மாற்று 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு ஜேசிபி இயந்திரம் உதவியோடு பள்ளத்தில் இருந்த 108 ஆம்புலன்சை மீட்டனர். பழுதான ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!