அம்பேத்கார் நினைவு நாள் அனுசரிப்பு

அம்பேத்கார் நினைவு நாள் அனுசரிப்பு
X

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலையில் அம்பேத்கார் நினைவு நாளில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்பேத்கார் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!