தானிப்பாடி அருகே சாராய ஊறல் அழிப்பு

தானிப்பாடி அருகே  சாராய ஊறல் அழிப்பு
X

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான போலீசார்  2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

தானிப்பாடி அருகே தட்டரணை காப்புக்காடு பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தட்டரணை காப்புக்காடு பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து, கீழே கொட்டி அழித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!