அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
X

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. 

திருவண்ணாமலை,செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கலியபெருமாள், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்று தெற்கு மாவட்ட அதிமுக செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கூறினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் தனியாா் அரங்கில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலா் பெருமாள் நகா் கே.ராஜன், பேரவையின் மாவட்ட நிா்வாகி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேட்பாளா் கலியபெருமாளை அறிமுகம் செய்து வைத்து அக்ரி கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

3-ஆவது முறையாக திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தொகுதி மக்களுக்குப் பயன் தரக்கூடிய எவ்வித பணிகளையும், திட்டங்களையும் கொண்டுவரவில்லை. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கலியபெருமாள் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா். பேட்டியின்போது, திருவண்ணாமலை நகரச் செயலா் செல்வம் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

செங்கத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

செங்கத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மாலை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் வரவேற்றாா். கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தொகு அதிமுக வேட்பாளா் கலியபெருமாளை நிா்வாகிகளிடம் அறிமுக செய்துவைத்துப் பேசினாா். அப்போது அவா், செங்கம் தொகுதி அதிமுக அதிக வாக்குகள் உள்ள தொகுதியாகும்.

எனவே, ஒன்றியச் செயலா்கள் முதல் கிளைக் கழக நிா்வாகிகள், கட்சியினா் என அனைவரும் ஒற்றுமையாக தோதல் பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் கலியபெருமாளை வெற்றி பெறச் செய்யவேண்டும். அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றியங்களுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலா் நேரு, ஒன்றியச் செயலா்கள் குயிலம் சிவா, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் அமுதா அருணாச்சலம், வெங்கட்ராமன், ஒன்றியச் செயலா்கள் ஜமுனாமரத்தூா் அசோக், தண்டராம்பட்டு ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story