புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண் உழவர்நலத்துறை ஆலோசனை குழு கூட்டம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண் உழவர்நலத்துறை ஆலோசனை குழு கூட்டம்
X

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசணைக்குழு கூட்டம் நடைபெற்றது.

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசணைக்குழு கூட்டம்.

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசணைக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA)-திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசணைக்குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குநர், புதுப்பாளையம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த மான்ய திட்டங்கள் மற்றும் வேளாண்மை இடுபொருட்கள் மான்ய விலையில் வழங்குதல் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள் வழங்குதல்,காய்கறி நாற்று வழங்குதல்,வீட்டு தோட்டம் அமைத்தல்,சொட்டுநீர் பாசனம் அமைத்தல் பற்றி ஆனந்தன் உதவி தோட்டக்கலை அலுவலர் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார்.

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையில் விவசாயிகள் ஆர்வலர் குழு அமைத்தல்,வேளாண் விளைப்பொருட்களை மதிப்பூகூட்டி விற்பனை செய்தல்,உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல் பற்றி காமராஜ் உதவி வேளாண்மை அலுவலர் அவர்கள் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை செயல்பாடுகளான விவசாயிகள் பயிற்சி, விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா புதிய தொழில்நுட்பங்களை செயல்விளக்கமாக செயல்படுத்துதல், திட்ட பண்ணைப் பள்ளி பயிற்சி பற்றி உறுப்பினர்களிடம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பு.செ.சங்கீதா அவர்கள் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் மாரி அவர்களும், தோட்டக்கலைத்துறை சார்பில்" உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தின் இறுதியில் வட்டார விவசாயிகள் ஆசோணைக்குழு தலைவர் கணபதி நன்றி உரை வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அ.சத்தியநாராயணன் மற்றும் சரவணன் அவர்கள் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business