செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உதவி இயக்குனர் நேரடி ஆய்வு
திருவண்ணாமலை உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 15.70, லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையம் கட்ட பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளை 15.3.2022 க்குள் முடிக்க அறிவுறுத்தினார்.
வலையாம்பட்டு ஊராட்சியில் ரூபாய் 33.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் பாலங்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் பி. குயிலம், கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிக்கான இடத்தினை கள ஆய்வு செய்து அது குறித்த தொழில்நுட்ப விவரங்களை கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செங்கம் மற்றும் புதுப்பாளையம் வட்டார நிலையிலான அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தி 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் இதர வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மேல் செங்கம் உதவி செயற்பொறியாளர் சங்கர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், பொறியாளர்கள் வெற்றிவேல் ,அமுதா, பணி மேற்பார்வையாளர், ஊட்டச்சத்து அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu