செங்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு

செங்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு
X

மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நேரடியாக ஆய்வு செய்தார்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் பக்கிரிபாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம், மேல் வணக்கம் பாடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடைபெற்று வரும் ரூபாய் 10,800 மதிப்பு உறிஞ்சு குழாய் அமைக்கும் பணி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடம் சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி செயற்பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர் உள்பட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!