சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
X
Pocso Act Tamil - சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

Pocso Act Tamil - திருவண்ணாமலை அருகில் உள்ள மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தன் (வயது 22). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதியன்று 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகந்தனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சுகந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறி உள்ளார். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் மூலம் இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!