அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கல்
அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ
அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை, போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியதத்துக்கு உட்பட்ட வாய்விடாந் தாங்கல், கீழ்படூர், நயம்பாடி, தாமரைப்பாக்கம், காஞ்சி, கெங்கம்பட்டு, ஒரந்தவாடி உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் மாவட்டச் செயலரும், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களையும் சந்தித்து திமுக அரசின் அவலங்களை எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தொடா்ந்து, தெற்கு மாவட்டம், செங்கம் மேற்கு ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் செங்கம் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, துக்காப்பேட்டை எம்ஜிஆா் சிலை அருகே பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டு செயலா்களை சந்தித்து அவா்களிடம் அதிமுக உறுப்பினா் அட்டையை வழங்கி சம்பந்தப்பட்ட உறுப்பினா்களிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழகப் பொருளாளர் நைனாகண்ணு, ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மூர்த்தி, புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிராஜ், மாவட்டப் பிரதிநிதி ரவி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகர கழக சார்பில் அனைத்து( 33 வார்டு) கழக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்,திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்,அசோக் குமார், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu