மத்திய நீர்வள ஆணையம் சார்பில், 75 - வது சுதந்திரதிருநாள் அமுது பெருவிழா

மத்திய நீர்வள ஆணையம் சார்பில், 75 - வது சுதந்திரதிருநாள் அமுது பெருவிழா
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் துணை சபாநாயகர் மற்றும் அரசு பிரதிநிதிகள்

சாத்தனூர் அணையில் மத்திய நீர் ஆணையம் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுது திருவிழா, நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் ஜல்சக்தி அமைச்சகம், நீர்வளம் நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை, மத்திய நீர் ஆணையம் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுது திருவிழா, சுற்றுலா மேம்படுத்தும் விழா, நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை. , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மத்திய பெண்ணையாறு வடிநிலை கோட்டம் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், பொறியாளர் சுரேஷ், மத்திய நீர் ஆணையம் கோவை தலைமை பொறியாளர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தெற்கு மண்டலம் சென்னை தலைமை இயக்குனர் தங்கமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து நீர் மேலாண்மை குறித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி , எ.வ.வே.கம்பன் , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் சான்றுகள் வழங்கி மாணவ மாணவிகளை பாராட்டினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கோவிந்தன், பாசன சங்கத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ், கால்வாய் பாசன சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

சுற்றுலா பயணிகள் கவரும் வண்ணம் 9 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. சாத்தனூர் அணை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு துணைச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், நிர்வாகிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!