4800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கி பிடித்த காவல்துறை
![4800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கி பிடித்த காவல்துறை 4800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கி பிடித்த காவல்துறை](https://www.nativenews.in/h-upload/2022/04/28/1524742-2791183045301095053181087490739664210157946n.webp)
காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மினிலாரி அரிசி மூட்டைகள்
திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்த முயன்ற 4800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டாட்டா மினி லாரி ஒன்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவின் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேல்செங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம், தலைமைக் காவலர் சக்திவேல் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் இணைந்து திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி சாலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆனந்தவாடி காவல் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் வட்டம், மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவர் TN70 K9423 என்ற எண் கொண்ட டாடா மினி லாரியில் சுமார் 4800 கிலோ கிராம் எடையுள்ள ரேசன் அரிசியை கடத்த முயன்றவரை மடக்கி பிடித்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது திருவண்ணாமலையில் இருந்து நாமக்கலில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த 40 கிலோ கிராம் எடைகொண்ட 120 அரிசி மூட்டைகள் மற்றும் டாடா மினி லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் R.சுந்தராம்பாள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu