கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கள்ளச்சாராயம்  விற்பனை செய்த மூவர் குண்டர்  தடுப்பு சட்டத்தில் கைது
X
கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், நாவக்கொல்லை கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், ஆகியோர் கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.R.தனலட்சுமி அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், ஜமுனாமரத்தூர் அருகே கோனேரி குடிசை கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர், கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.R.சசிக்குமார் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story