குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு

குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முட்புதரில் கிடந்த, பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் பச்சிளங்குழந்தையை ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து வட்டார மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரத்தில் உயிருடன் வீசப்பட்ட ஆண் பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷிடம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்கள்.

தொடர்ந்து பெறப்பட்ட ஆண் குழந்தையை செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்து சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பாதுகாக்க மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!