உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆரணியில் ஆட்சியா் நேரில் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆரணியில் ஆட்சியா் நேரில் ஆய்வு
X

பட்டு சேலை நெசவு உற்பத்தி செய்வதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் தபாஸ்கரன் பாண்டியன் ஆரணியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, முள்ளிப்பட்டு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தாா். மேலும் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு மாணவா்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளியில் பயிலும் மாணவா்களிடம் திறனாய்வு மேற்கொண்டாா். மாணவா்களுக்கு வாசிப்புத்திறன் உள்ளதா என்றும் ஆய்வு செய்தாா்.

பின்னா், ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யாறு கோட்டாட்சியா் பல்லவிவா்மா, ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோா் பாா்வையிட்டு நோயாளிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்தனா்.

மேலும் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்றும், சரியான சிகிச்சை அளிக்கப்படுகிா என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தனா். மேலும் ஆட்சியரின் உத்தரவின் பேரில், நகர ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் பவித்ரா ஆரணியில் புதிதாக திறக்கப்பட்ட ரூ.1.88 கோடி மதிப்பிலான நூலகத்தை பாா்வையிட்டாா். பின்னா், பழைய நூலகத்தில் ஆய்வு செய்தாா். பின்னா், சைதாப்பேட்டை நியாய விலைக் கடையில் மேற்கூரை சேதமடைந்துள்ளதை சீரமைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சேவூா்- அடையபலம் சாலையில் உள்ள நெசவாளா் வீட்டுக்குச் சென்று பட்டுச் சேலை நெசவு உற்பத்தி செய்வதை பாா்வையிட்டாா். நெசவு செய்யும் நெசவாளியிடம் குறைகளை கேட்டறிந்தாா். நெசவுத் தொழிலாளி வெங்கடேசன் ஆட்சியரிடம், கைத்தறி பட்டுச் சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்வதால், நெசவாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.

பின்னா், கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்தாா். ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி ஆய்வு மேற்கொண்டாா் . வைகை நியாய விலைக் கடையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தாா். உயிரி உரம் தயாரித்தல் குறித்தும் ஆய்வு செய்தாா் . ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆய்வு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு மோட்டாா் உடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கினார் .

இந்த ஆய்வின்போது செய்யாறு கோட்டாட்சியா் பல்லவிவா்மா, ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!