வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
X
ஆரணி அருகே கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

ஆரணி, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தள்ளுவண்டி கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆரணி, துந்தரிகம்பட்டு கிராமம், அண்ணா தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், துந்தரிகம்பட்டு ஏரிக்கரையின் அருகில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்..

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai healthcare technology