நாளை வாக்கு எண்ணிக்கை: 8 வாக்கு மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: 8 வாக்கு மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 நகராட்சிகள் மற்றும், 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சிக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், செய்யாறு நகராட்சிக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதேபோல செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு, செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு, திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கண்ணமங்கலம், போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு போளூர் ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியிலும், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர், அவருடன் ஒரு நபர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சி.சி.டிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எடுத்துரைத்தார். உடன் தேர்தல் அலுவலர் பி.தமிழ்ச்செல்வி இருந்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil