ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்

ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்
X
ஆரணி கோட்டம் பகுதிகளில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மின் பகிர்மான வட்டம் ஆரணி கோட்டம், கிழக்கு சந்தவாசல் பிரிவுக்குட்பட்ட பாளைய ஏகாம்பரநல்லூர், சேதாரம்பட்டு கிராமங்களில் பகுதியாகவும் மற்றும் பார்வதி அகரம், சின்ன சந்தவாசல் கிராமங்களில் முழுமையாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த மாதம் (செப்டம்பர்) மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

ஆகவே, மின் பயனீட்டாளர்கள் ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்தலாம். அல்லது தங்களின் மீட்டரில் உள்ள ரீடிங் கைபேசியை பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலமாக, சந்தவாசல் உதவி மின் பொறியாளர் கைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்ணுக்கு (94 45 85 6140) அனுப்பினால் மின்கட்டணம் மாற்றம் செய்யப்படும் என்று, மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future