சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் ஆர்டிஓ எச்சரிக்கை
X

சேத்துப்பட்டு பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் விஜயராஜன் தலைமையில் கொரோனா நோய் தோற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம், நம்பேடு, நெடுங்குணம், உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று குறித்து மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் செயல்படுகின்றனர்.

குறிப்பாக வணிக வளாகங்களில் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். ஆனால் இப்பகுதிகளில் முறையாக வணிகர்களும் பொதுமக்களும் அரசு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை,

சேஎனவே இப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் சேத்துப்பட்டு தாசில்தார் சமூக பாதுகாப்பு தாசில்தார் வருவாய் அலுவலர்கள் ஒன்றிய ஆணையர்கள் காவல்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil