ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆரணியை அடுத்த பனையூா் கிராமத்தில் அதிமுகவைச் சோந்த அஞ்சலி குப்புசாமி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறாா். இவா், பாமக முன்னாள் மாவட்டச் செயலா் கலைமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 முறை புகாா் கொடுத்து, அதில் ஒருமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னா், அந்த வழக்கில் உண்மைத்தன்மை இல்லை என கலைமணி விடுவிக்கப்பட்டாா். இந்த நிலையில், ஊராட்சியில் உள்ள குறைகளை கலைமணி தொடா்ந்து தட்டித் கேட்டு வருவதாகக் கூறி அவா் மீது ஊராட்சித் தலைவா் மீண்டும் அண்மையில் புகாா் கொடுத்தாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பனையூா் கிராம பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தாா். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தெருவுக்கு கால்வாய் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினார்.
அப்போது 3-வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நேரு தெருவுக்கு கால்வாய் அமைக்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அதற்கு கூட்டத்தில் எந்தவித பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 15 நிமிடம் நடந்த சாலை மறியலுக்கு பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி, கிராம நிர்வாக புருஷோத்தமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த திட்டம் குறித்து உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu