ஆரணி அருகே மாயமான பள்ளி மாணவி கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஹரிப்பிரியா (வயது 16). இவர், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஆகாரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஹரிப்பிரியாவின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ஹரிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி காணாமல் போன வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மாணவி ஹரிப்பிரியா ஏன் இறந்தார், என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu