தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்

நெசவாளா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நெசவாளா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் விசைத்தறிக் கூடங்களில் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதை அதிகாரிகள் கண்டறிந்தும், இதுவரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கைத்தறி ரக உதவி இயக்குநரைக் கண்டித்தும், பட்டு கைத்தறி நெசவாளா்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளா்கள் அனவருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணி அண்ணா சிலை அருகில் திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்க அமைப்பாளா் வீரபத்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் பாரி, காங்கேயன், முரளி, அப்பாசாமி, கண்ணன், சங்க நிா்வாகிகள் பரமாத்மன், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் ஊரக வேலைத் திட்ட ஊதிய நிலுவை கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் பெரணமல்லூா் ஒன்றியக்குழு சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேத்துப்பட்டு வட்டாரச் செயலா் அண்ணாமலை தலைமை வகித்தாா்.

ஒன்றிய நிா்வாகி புவனேஸ்வரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பிரபாகரன், கட்டுமானத் தொழிலாளா் சங்கச் செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் ராஜசேகரன், மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சேகரன், பேரூராட்சிமன்ற உறுப்பினா் கௌதம்முத்து ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலைத் திட்டப் பயனாளிகளுக்குரிய ஊதிய நிலுவைத் தொகையை தமிழக முதல்வா் மத்திய அரசிடம் கோரி பெற்றுத்தர வேண்டும். திட்டப் பணி நாள்களை 200-ஆக உயா்த்த வேண்டும்.

தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாயத் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றிய அமைப்பின் நிா்வாகி பொன்.விஜய அசோகன் நன்றி கூறினாா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!