ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு
X

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினர் கவிதாபாபு பேசுகையில், சுபான் ராவ் பேட்டையில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் முறையாக செல்லாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது என்றார்.

ஜெயபிரகாஷ் பேசுகையில், கிராமப்பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படுவதாக கூறி பொக்லை எந்திரம் வைத்து பள்ளம் எடுக்கப்பட்டது. நன்றாக இருந்த சாலைகளை உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டதால் அங்கு குளம் போல காட்சியளிக்கிறது என்றார்.

ஒன்றிய துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் பேசுகையில் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் குடிநீா்க் குழாய் அமைக்க சாலைகளை தோண்டி விடுகின்றனா். பின்னா், அதை சரி செய்யாமல் விட்டுவிடுவதால் பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் நேரிடுகின்றன.

அப்பகுதிகளை ஊராட்சியில் சாலை போடவேண்டும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால், உறுப்பினா்கள் சாா்பில் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறேன் என்றாா்.

இதற்குப் பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கவிதா பாபு, ஜெயப்பிரகாஷ், குமாா் உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பாண்டியன் உள்ளிட்டோா் உரிய பதிலளித்தனா். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி குறைகளைத் தெரிவித்தனா்.

அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் படித்து நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!